மனிதநேய மைய மாணவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதனை - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, October 25, 2020

மனிதநேய மைய மாணவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதனை

 மனிதநேய மைய மாணவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதனை


சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில், மனிதநேயம் அறக்கட்டளை மையத்தில் படித்த மாணவர்கள், சாதனை படைத்துள்ளனர்.


ஐ.ஏ.எஸ்., ~ ஐ.பி.எஸ்., உட்பட, சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான, காலி பணியிடங்களை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஒவ்வொரு ஆண்டும் அறிவித்து, அதற்கான தேர்வை நடத்தி வருகிறது.


இந்தாண்டிற்கான, முதல்நிலைத் தேர்வு, இம்மாதம், 4ம் தேதி நடந்தது. தேர்வு முடிவுகள், 24ம் தேதி வெளியிடப்பட்டன.


மொத்தம், 796 காலி பணியிடங்களை நிரப்ப நடந்த தேர்வில், 'மனிதநேயம் அறக்கட்டளை' பயிற்சி மையத்தில் படித்த, 22 மாணவர்கள், ஒன்பது மாணவியர் என, 31 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ ~~ மாணவியர் அனைவரும், முதன்மை தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பிற்காக, www.mntfreeias.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என, பயிற்சி மைய நிறுவனரும், சென்னை, மாநகர முன்னாள் மேயருமான, சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.


இந்த மையத்தில் படித்து கடந்த, 14 ஆண்டுகளில், 3,534 மாணவ~ ~ மாணவியர் தேசிய மற்றும் மாநில அளவில், பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment