முதுநிலை சேர்க்கை கவுன்சிலிங்கை தள்ளி வைக்க கோரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, October 25, 2020

முதுநிலை சேர்க்கை கவுன்சிலிங்கை தள்ளி வைக்க கோரிக்கை

 முதுநிலை சேர்க்கை  கவுன்சிலிங்கை தள்ளி வைக்க  கோரிக்கை


இளங்கலை படிப்பில், இறுதியாண்டு தேர்வு முடிவுகள் பலருக்கும் வராததால், முதுநிலை சேர்க்கை கவுன்சிலிங்கை தள்ளி வைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2020 ~ 21ம் கல்வியாண்டு, முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, ஆன்லைன் வழியில் நடந்து முடிந்துள்ளது.


இந்நிலையில், முதுநிலை மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது. 


இளங்கலை இறுதியாண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வராத நிலையில், முதுநிலை கவுன்சிலிங்கை தள்ளி வைக்க வேண்டும் என, பட்டதாரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment