சென்னை பல்கலைக்கழக அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க ஆட்சிமன்ற கூட்டத்தில் முடிவு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, October 17, 2020

சென்னை பல்கலைக்கழக அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க ஆட்சிமன்ற கூட்டத்தில் முடிவு

 சென்னை பல்கலைக்கழக அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க ஆட்சிமன்ற கூட்டத்தில் முடிவு


சென்னை பல்கலைக்கழக அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க ஆட்சிமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 


தமிழகத்தில், கலை அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ., படிப்புகளுக்கான அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


இந்த வழக்குகளுக்கு பதிலளித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம், பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. 


அதில், தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்யாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பேரிடர் காலத்தில் இறுதியாண்டு மாணவர்கள் தவிர, பிற மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது சிக்கலானது என்பதால், அடுத்த கல்வியாண்டுக்கு மாணவர்களை முன்னேற்றி, அவர்கள் தொடர்ந்து ஆன் லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள செய்வதற்கு ஏதுவாக பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை வெளியிட்டதாகவும், இறுதி பருவத் தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் கூறியுள்ளது.


 மேலும், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்கு புறம்பானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற உள்ளது. இதனையடுத்து, தற்போது சென்னை பல்கலைக்கழக அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க ஆட்சிமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரியர் தேர்ச்சி தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சென்னை பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது.

No comments:

Post a Comment