'பிளே ஸ்கூல்கள்' நடத்துவது விளையாட்டல்ல! விதிமுறை மாற்ற எதிர்பார்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 8, 2020

'பிளே ஸ்கூல்கள்' நடத்துவது விளையாட்டல்ல! விதிமுறை மாற்ற எதிர்பார்ப்பு

 'பிளே ஸ்கூல்கள்' நடத்துவது விளையாட்டல்ல! விதிமுறை மாற்ற எதிர்பார்ப்பு


நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல், பல பிளே ஸ்கூல்கள், மூடு விழா காணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.


 அங்கீகார விதிமுறைகளில் சில தளர்வுகள் வழங்கினால் மட்டுமே, தொடர்ந்து இப்பள்ளிகளை இயக்க முடியும் என, நிர்வாகிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. 


தனியார் பள்ளிகள், 40 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது


.இதனால், ஆசிரியர்கள், உதவியாளர்கள், பராமரிப்பு செலவினங்களுக்கு திண்டாடும் நிலை இருக்கிறது. இந்நிலையில், முன்மழலையர் பள்ளி உரிமையாளர்களும், அரசின் உதவியை எதிர்பார்த்து, முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளனர்.


பள்ளி நிர்வாகங்கள் தவிப்புதமிழகம் முழுக்க, 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்மழலையர் பள்ளிகள் உள்ளன. இதில், நகரின் மையப்பகுதியில் உள்ள பல பள்ளிகள், வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன.


ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஆன்லைன் வகுப்பு எடுக்க அனுமதிக்காததால், கல்வி கட்டணம் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக, முன்மழலையர் பள்ளி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


ஆசிரியர்கள், உதவியாளர்கள், எந்த வேலை வாய்ப்பும் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வாடகை உள்ளிட்ட செலவினங்களை சமாளிக்க முடியாமல், பலர் பள்ளிகளை முட முன்வந்துள்ளனர்.


இயல்பு நிலை மாறிய பிறகு, அரசு சில சலுகைகளை வழங்காவிடில், பள்ளிகளை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என்கின்றனர்,


 முன்மழலையர் பள்ளி உரிமையாளர்கள்.கோயமுத்துார் இளம் மழலையர் பள்ளிகள் சங்கத்தின், மாவட்ட தலைவர் கவுதமன் கூறியதாவது


:முன் மழலையர் பள்ளிகளை ஒழுங்குப்படுத்தும் நோக்கில், டிச., 2015ல், பிரத்யேக வழிகாட்டி நெறிமுறை உருவாக்கப்பட்டது. இதில், 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமித்தல், ஒரு மாணவருக்கு, 10 சதுர அடி வீதம் வகுப்பறை இருப்பது கட்டாயமாக்கப்பட்டது.


இக்கட்டமைப்பு வசதிகள் பல பள்ளிகளில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால், வாடகை கட்டடமாக இருந்தால், ஐந்து ஆண்டு ஒப்பந்தம் கோரப்படுகிறது. 


இடநெருக்கடி மிகுந்த நகர்ப்புற பகுதிகளில், ஐந்து ஆண்டு ஒப்பந்தத்திற்கு, உரிமையாளர்கள் உடன்படுவதில்லை.பல முன்மழலையர் பள்ளிகள், வேலைக்கு செல்லும் பெற்றோரின் குழந்தைகளை பராமரிக்கும் மையங்களாகவே செயல்படுகின்றன.குடியிருப்பு போன்ற அமைப்பில், முறையான பாதுகாப்பு வசதிகளுடன் பள்ளிகள் இயக்க, அரசு ஒப்புதல் வழங்க வேண்டும். 


அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகளை எளிமையாக்கினால் தான், நிதி செலவினங்களில் இருந்து, முன்மழலையர் பள்ளிகளால், தப்பிக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment