கொரோனாவை தொடாமலே விரட்டலாம்: வழிகாட்டுகிறார் ஒன்பதாம் வகுப்பு மாணவர் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 8, 2020

கொரோனாவை தொடாமலே விரட்டலாம்: வழிகாட்டுகிறார் ஒன்பதாம் வகுப்பு மாணவர்

 கொரோனாவை தொடாமலே விரட்டலாம்: வழிகாட்டுகிறார் ஒன்பதாம் வகுப்பு மாணவர்


ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர், தானியங்கி கிருமி நாசினி வழங்கும் கருவியை வடிவமைத்து, அதனை இ.எஸ்.ஐ.,மருத்துவமனைக்கு தானமாக வழங்கி அசத்தியுள்ளார். 


கோவை, காந்திபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவர். இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன், மகிழன்,14. தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.


 மகிழனுக்கு சிறுவயதில் இருந்தே, மின்னணு சாதனங்களை தயாரிப்பதில் அதிக ஈடுபாடு உண்டு.மகனின் திறமையை உணர்ந்த சண்முகவேல், தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் கருவி உருவாக்குமாறு ஊக்குவித்துள்ளார். இது குறித்து மகிழன், ''கொரோனா பரவாமல் இருக்க கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தி வருகின்றனர். மருத்துவமனை போன்ற பொது இடங்களில் பலரும் வந்து செல்வதால், கிருமிநாசினி பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.


அதேசமயம், கிருமிநாசினி பாட்டில்களை, ஒருவர் கைகளால் தொட்டு பயன்படுத்தும்போது, மற்றவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதற்காக, சமூகவலைதளங்களில் பார்த்து, அதில் இருக்கும் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு, தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் கருவியை வடிவமைத்தேன்.

No comments:

Post a Comment