அரசு பள்ளி மாணவர்களுக்கு 'வாட்ஸ் ஆப்' வாயிலாக தேர்வு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 8, 2020

அரசு பள்ளி மாணவர்களுக்கு 'வாட்ஸ் ஆப்' வாயிலாக தேர்வு

 அரசு பள்ளி மாணவர்களுக்கு 'வாட்ஸ் ஆப்' வாயிலாக தேர்வு


காலாண்டு தேர்வுகளை அரசு ரத்து செய்து விட்டதால், தனியார் பள்ளிகள், ஆன்லைனில் தேர்வை நடத்தி வருகின்றன.


ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, இன்னும் நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை


.புதிய கல்வி ஆண்டில், அனைத்து மாணவர்களுக்கும், ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி மாணவர்களுக்கு, செப்டம்பரில் காலாண்டு தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு காலாண்டு தேர்வை, பள்ளி கல்வித்துறை ரத்து செய்துள்ளது.


இதையடுத்து, மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்கும் வகையில், அவர்களுக்கு கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், ஆன்லைன் தேர்வுகளை நடத்த, தனியார் பள்ளிகள் ஏற்பாடு செய்துள்ளன.


அதேபோல, அரசு பள்ளி ஆசிரியர்களில், 'வாட்ஸ் ஆப்' வழியே பாடம் நடத்தும் பலர், தங்கள் மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் வினாக்களை அனுப்பி, பெற்றோர் முன்னிலையில் தேர்வு எழுத அறிவுறுத்தி உள்ளனர்.


'மாணவர்களுக்கு, கல்வியின் மீதான சோர்வு ஏற்படாமலும், அவர்களுக்கு கற்றலில் நீண்ட இடைவெளி இல்லாமல் இருக்கவும், இந்த குறுந்தேர்வுகள் உதவும்' என, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment