இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங் துவக்கம் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 8, 2020

இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங் துவக்கம்

 இன்ஜினியரிங் பொது  கவுன்சிலிங் துவக்கம்


இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, கல்லூரிகளின் கட்டண விபரங்கள் மற்றும் கல்லூரிகளின் உள் கட்டமைப்பு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லூரிகளில், பி.இ., ~ பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, கவுன்சிலிங், அக்., 1ல் துவங்கியது.


முதலில், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில், 500 இடங்கள் நிரப்பப்பட்டன. இதையடுத்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், நேற்று துவங்கியது.


இந்த கவுன்சிலிங், நான்கு சுற்றுகளாக நடத்தப்படுகிறது. முதல் சுற்றுக்கான கட்டண அவகாசம் நேற்று துவங்கியது. நாளை மறுதினம் வரை கட்டணம் செலுத்தலாம்.


அக்., 12, 13ம் தேதிகளில், விருப்ப பதிவை மேற்கொள்ள வேண்டும். இதற்கான கால அட்டவணை, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


அதேபோல், கல்லூரிகளின் கவுன்சிலிங் குறியீட்டு எண், பாடப்பிரிவுகள், கட்டண விபரங்கள் மற்றும் கல்லூரிகளின் உள் கட்டமைப்பு விபரங்களும், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றை பார்த்து, மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்லுாரிகளின் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment