அரசு பள்ளி மாணவருக்கு முழுநேரம் 'நீட்' பயிற்சி: மாவட்ட வாரியாக மையம் அமைக்க வலியுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 22, 2020

அரசு பள்ளி மாணவருக்கு முழுநேரம் 'நீட்' பயிற்சி: மாவட்ட வாரியாக மையம் அமைக்க வலியுறுத்தல்

 அரசு பள்ளி மாணவருக்கு முழுநேரம் 'நீட்' பயிற்சி: மாவட்ட வாரியாக மையம் அமைக்க வலியுறுத்தல்


அரசு பள்ளி மாணவருக்கு, முழு நேரம், 'நீட்' பயிற்சி அளிக்க, விடுதியுடன் கூடிய மையங்கள் அமைக்க, ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.


எம்.பி.பி.எஸ்., ~ பி.டி.எஸ்., உள்ளிட்டவைக்கு, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், சேர்க்கை நடத்தப்படுகிறது.


 இதனால், தனியார் மையங்களில், பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, தனியார் பள்ளி மாணவ, மாணவியர், ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுக்கு, முழு நேர பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களோடு போட்டியிட முடியாமல், அரசு பள்ளி மாணவ, மாணவியர், மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை கைவிட வேண்டிய கட்டாயம் உருவாகிறது. 


இதை தவிர்க்க, அரசு சார்பில், ஒன்றியம் வாரியாக, மையங்கள் அமைத்து, விடுமுறை நாள், மாலை நேரங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகின்றன. ஆனாலும், இதில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.


 3,500க்கும் மேற்பட்ட மருத்துவ சீட்களில், ஒற்றை இலக்கத்தை எட்டி பிடிக்கவே போராடும் நிலை உள்ளது. நடப்பு கல்வியாண்டில், 'நீட்' தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் ஜீவித்குமாரும், பள்ளிப்படிப்பை முடித்து, முழு நேரம், ஓராண்டு 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்ற பின்பே சாதிக்க முடிந்தது. 


இதன்மூலம் உரிய பயிற்சி அளிக்கப்பட்டால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மற்ற மாநிலங்களை விட, சாதித்து காட்ட முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment