தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வழங்கல் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 22, 2020

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வழங்கல்

 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வழங்கல்


உளுந்துார்பேட்டையில் 4 மாவட்டத்தில் உள்ள 205 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.


உளுந்துார்பேட்டை ஸ்ரீ விநாயகா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் விழா நடந்தது. உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ., குமரகுரு தலைமைதாங்கினார். ஸ்ரீ விநாயகா கல்வி குழுமத் தலைவர் நமச்சிவாயம் வரவேற்றார்


.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மெட்ரிக் பள்ளிகள், நிதியுதவி பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 60 பள்ளிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 54 பள்ளிகள், கடலுார் மாவட்டத்தில் 66 பள்ளிகள்,அரியலுார் மாவட்டத்தில் 25 பள்ளிகள் என 205 பள்ளிகளுக்கானஅங்கீகார ஆணையை வழங்கினார்.


விழாவில் மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் கருப்புசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, சி.இ.ஓ.,க்கள் கள்ளக்குறிச்சி கிருஷ்ணபிரியா, விழுப்புரம் முனுசாமி, பிரபு எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேலு பாபு, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் செண்பகவேல், சந்திரன், பழனிவேல், ஏகாம்பரம், ராமலிங்கம், ராஜசேகர், தேவேந்திரன், ராஜேந்திரன், அய்யம்பெருமாள், அரசு, கிருஷ்ணமூர்த்தி, கதிர் தண்டபாணி, அருணகிரி, துரைராஜ், பழனிசாமி, சேகர், நகர செயலாளர்கள், நிர்வாகிகள், தனியார் பள்ளி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment