ரப்பர், காகித தொழில்நுட்பம் பி.டெக்., படிக்கலாம்! - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 22, 2020

ரப்பர், காகித தொழில்நுட்பம் பி.டெக்., படிக்கலாம்!

 ரப்பர், காகித தொழில்நுட்பம் பி.டெக்., படிக்கலாம்!


ரப்பர் மற்றும் பிளாஸ்டிக், காகித தொழில்நுட்பம் சார்ந்த பி.டெக்., மற்றும் உயர் படிப்புகளுக்கு, தொழில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


ரப்பர், ரப்பர் சார்ந்த பொருட்களின் உற்பத்தி, ரப்பர் பொருட்களை உருவாக்கும் இயந்திர சாதனங்களின் உற்பத்தி, அதன் இயக்கம் போன்றவற்றை பற்றிய படிப்பு தான் ரப்பர் டெக்னலாஜி. ரப்பர் தொழிற்சாலைகள், வேதி பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், ஆராய்ச்சிக் கூடங்களில் ரப்பர் டெக்னாலஜி படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது. இது நான்கு ஆண்டு படிப்பு. இதே துறையில் முதுநிலை படிப்புகளை படிக்க வாய்ப்புகள் உள்ளன.


காகித தொழில்நுட்பம் ~ பி.டெக்.,இந்த இளநிலை கல்வியில் மாணவர்களுக்கு மர அறிவியல், கூழாக்குதல், பிளீச்சிங், சரக்கு தயாரித்தல், காகித இயந்திரங்கள், பொருளாதாரம் போன்ற விஷயங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.


 காகிதம் மற்றும் காகிதக் கூழ்தொழில்நுட்பத்தில் அடிப்படையான பயிற்சி, இந்த பட்டப்படிப்பின் வாயிலாக அளிக்கப்படுகிறது.


இந்த படிப்பை முடித்தவுடன் காகிதம் தயாரிப்பதில் உள்ள தொழில்நுட்பங்களை மாணவர்கள் தெளிவாக அறிந்து கொள்வதுடன், இந்த துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை பெற முடியும். இது நான்கு ஆண்டு கால படிப்பு. இதே பிரிவில், முதுகலை படிப்பும் உள்ளது.


No comments:

Post a Comment