அண்ணாமலை பல்கலையில் தரவரிசை பட்டியல் வெளியீடு
அண்ணாமலை பல்கலையில் ஆன் லைன் மூலம் வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட மற்றும் பட்டய படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் ஆன் லைன் மூலம் வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்டம் மற்றும் பட்டய படிப்பு சேர்க்கைக்கான மாணவர்களின் தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.
துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன் தரவரிசை பட்டியலை வெளியிட, பதிவாளர் ஞானதேவன் பெற்றுக் கொண்டார்.வேளாண் புலத்தில் 8,654 விண்ணப்பங்கள் பெற்றதில், 8,346 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இதில் 21 நபர்கள் மாற்றுத் திறனாளிகள்.
வேளாண் புலத்திலுள்ள சுயநிதிப் பிரிவில் 2,815 விண்ணப்பங்களில், 2,727 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. தோட்டக்கலையில் 1,669 விண்ணப்பங்களில் 1,628 ஏற்கப்பட்டன. தோட்டக்கலை, விவசாயத் துறைகளுக்கான பட்டயப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது.
பதிவாளர் ஞானதேவன் கூறுகையில், 'அனைத்து விவசாய, தோட்டக்கலை பட்ட மற்றும் பட்டய படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 27ம் தேதி முதல் 30 ம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும். இதற்கான விபரங்கள் இரு தினங்களில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக இணையதளத்தை பார்வையிட்டு அறிவிப்புகளை அறிந்து கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பப்பட மாட்டாது', என்றார்.
No comments:
Post a Comment