ரஷ்ய தடுப்பூசிக்கு இந்தியாவில் ‘செக்’ : மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 9, 2020

ரஷ்ய தடுப்பூசிக்கு இந்தியாவில் ‘செக்’ : மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு அறிவிப்பு

 ரஷ்ய தடுப்பூசிக்கு இந்தியாவில் ‘செக்’ : மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு அறிவிப்பு


ரஷ்ய தடுப்பூசிக்கு இந்தியாவில் ‘செக்’ வைக்கும் விதமாக, மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு திடீர் கெடுபிடிகளை தெரிவித்துள்ளது.


 கொரோனா தொற்றுக்கு ‘ஸ்புட்னிக் - 5’ என்ற பெயரில் தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. இதற்கு இன்னும் உலக சுகாதார அமைப்பின் அனுமதி கிடைக்கவில்லை. 


இதனிடையே, ஸ்புட்னிக் - 5 தடுப்பு மருந்தை இந்தியாவில் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யவும் விநியோகம் செய்யவும் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்துடன், ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட் டரிஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.


ரஷ்யாவின் ஸ்புட்னிக் - 5 தடுப்பு மருந்தை இந்தியாவில் பரிசோதனை செய்ய மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும் என்பது விதிமுறை.


 இதற்காக அனுமதி கோரி தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவனம் விண்ணப்பித்தது. இதைப் பரிசீலித்த மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, அந்த மருந்தை பெரியஅளவில் பரிசோதனை செய்ய அனுமதி மறுத்துள்ளது. மேலும், மருந்தின் பாதுகாப்பான தன்மை, நோய் எதிர்ப்பு திறன் குறித்து முதலில் சிறிய அளவில் பரிசோதிக்குமாறு ரெட்டிசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.


 இந்தியாவின் தீடீர் நடவடிக்கையால் முழுமையான பரிசோதனைகளுக்கு முன்பாகவே தடுப்பு மருந்தை விநியோகிக்கலாம் என்ற ரஷ்யாவின் திட்டத்துக்கு இதனால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment