வாட்ஸ் அப்பில் வருகிறது மூன்று புதிய அம்சம்: இனி இந்த பிரச்சனை இருக்காது!
வாட்ஸ்அப்பில் புதிய அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளது. வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் புதிய அம்சங்கள் முதற்கட்டமாக பீட்டா பயனர்களுக்கு கிடைக்கும். அதன்பின்னரே அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
மூன்று புதிய அம்சங்கள்
வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் மூன்று புதிய அம்சங்கள் குறித்து பார்க்கையில், அது ஆல்வேஸ் மியூட், புது சேமிப்பு பயன்பாடு, ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சோதனை மேற்கொள்வதற்கான ஊடக வழிகாட்டுதல்கள் உட்பட பல அம்சங்கள் வெளியாகிறது.
வாட்ஸ்அப் பீட்டா 2.20.201.10 பதிப்பில் இந்த அம்சங்கள் வெளியிடப்பட இருக்கிறது. பீட்டாப் பதிப்பில் அறிமுகப்படுத்தப்படும் சோதனை வெற்றிகரமாக முடிந்தால் அடுத்தக்கட்டமாக பிற பயனர்களுக்கும் கிடைக்கும். இந்த அம்சங்களின் விவரங்களை தனித்தனியே பார்க்கலாம்
இந்த அம்சத்தில் மூலம் பிற நபர்களை எப்போதும் முடக்கலாம். தனிப்பட்ட அரட்டைகளை எப்போது வேண்டுமானாலும் முடக்கம் செய்யலாம். எப்போதும் முடக்கம் என்ற புதிய அம்சமானது முன்னதாக அதிகப்பட்சமாக ஒரு வருடத்திற்கு மட்டுமே முடக்கம் செய்ய அனுமதித்தது. தற்போது எப்போது வேண்டுமானாலும் முற்றிலும் முடக்கலாம்.
வாட்ஸ்அப் சேமிப்பு யுஐயை புதுப்பித்திருக்கிறது. ஏணைய பயனர்கள் இந்த புதிய சேமிப்பு யுஐ அம்சங்களை பெறத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் கூடுதல் விவரங்களும் உள்ளது. அது எந்த கோப்புகளை அதிக சேமிப்பிடத்தை எடுத்துக் கொள்ளும். அதோடு எந்த கோப்புகளை நீக்கனும், எதை வைத்திருக்க வேண்டும் என காண முடியும், முன்னதாக மொத்த ஃபைலாக காண்பிக்கும்.
வெரிபைட் பிஸ்னஸ் அக்கவுன்ட்
அதோடு முறைப்படுத்தி சரிபார்க்கப்பட்ட வணிக கணக்கு (வெரிபைட் பிஸ்னஸ் அக்கவுன்ட்)-ல் இருந்து வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங்க பட்டனர்களை நீக்கி இருக்கிறது. தொடர்பு தகவலில் இருந்து இது அகற்றப்பட்டிருந்தாலும் அரட்டை, தொடர்பு பட்டியல் சுய விவர ஐகானுக்குள் சென்றால் இந்த விவரம் காட்டப்படுகிறது.
No comments:
Post a Comment