ராணுவ பள்ளியில் 'அட்மிஷன்' :அரசு பள்ளி மாணவர் அசத்தல்  - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, October 16, 2020

ராணுவ பள்ளியில் 'அட்மிஷன்' :அரசு பள்ளி மாணவர் அசத்தல் 

 ராணுவ பள்ளியில் 'அட்மிஷன்' :அரசு பள்ளி மாணவர் அசத்தல் 


திருப்பூர், நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர், நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று, நாட்டின் தலைசிறந்த ராணுவ பள்ளியில் சேர்ந்துள்ளார்.உத்தரகான்ட் மாநிலம், டேராடூனில் ராஷ்ட்டிரிய ராணுவ கல்லுாரி செயல்படுகிறது. 


இப்பள்ளியில் சேர விரும்புவோர் தகுதித்தேர்வு, உடற்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். சில மாதங்களுக்கு முன் நடந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.இவர்களில், திருப்பூரை சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். 


திருப்பூர், ஓடக்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். பொங்கலுார் வட்டார கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார். இவரது மகன் அஸ்வத்ராம், 12. நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.


நுழைவு தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றதால், பிளஸ் 2 வரை நாட்டிலேயே தலைசிறந்த ராணுவ பயிற்சி பள்ளி டேராடூனில் கல்வி பயில உள்ளார்.மாணவர் அஸ்வத்ராமை பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி மற்றும் ஆசிரியர்கள், பாராட்டி வாழ்த்தினர்.

No comments:

Post a Comment