பாடத்திட்டங்கள் ஆடியோ பதிவு செய்யும் பணிகள் விறுவிறு
உடுமலை கல்வி மாவட்டத்தில், பாடத்திட்டங்கள் ஆடியோ பதிவு செய்யும் பணிகள் நடக்கிறது.மாணவர்கள்
பள்ளிக்கு வர அனுமதியில்லாத சூழ்நிலையால், வீட்டிலிருந்து கல்வி கற்கும் வகையில் வீடியோ பாடங்கள் வடிவமைத்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.பாடங்களை அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து, வீடியோ பதிவு பணிகளை மேற்கொள்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், நான்காம் வகுப்பு சமூக அறிவியல், பிளஸ் 1 வகுப்பு உயிரியல், பிளஸ் 2 நெசவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கான வீடியோ பதிவுகள் நடக்கிறது.
வானொலி மூலமும், பாடங்களை ஒலிபரப்ப, பத்தாம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை, குரல் பதிவு செய்வதற்கு, கடந்த மாதம், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 45 ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போது, பாடங்களை ஆசிரியர்கள் விளக்கும் வகையில் ஒலிப்பதிவு பணிகள், உடுமலை கல்வி மாவட்டத்தில், நடக்கிறது.திருமூர்த்திநகர் ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் பாபி இந்திரா மற்றும் சுப்ரமணியம், பதிவுப்பணிகளை ஒருங்கிணைக்கின்றனர்.
ஆசிரியர் கண்ணபிரான், ஆசிரியர்களின் குரல் பதிவு பணிகளை தொழில்நுட்பரீதியாக பதிவேற்றம் செய்து வருகிறார்.உடுமலை பெத்தல் பள்ளியில், பாடங்கள் ஒலிப்பதிவு செய்து, காலாண்டு வரை உள்ள பாடங்களை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் அனுப்பி வருகின்றனர்
No comments:
Post a Comment