பொதுஊரடங்கு நீட்டிப்பா? இன்று அறிவிப்பு! - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 30, 2020

பொதுஊரடங்கு நீட்டிப்பா? இன்று அறிவிப்பு!

 பொதுஊரடங்கு நீட்டிப்பா? இன்று அறிவிப்பு!தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இன்று நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது கைவிடப்படுமா என்பதை, இன்று முதல்வர் அறிவிக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.


தொற்று பரவலை தடுக்க, தமிழகம் முழுதும், பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அக்., 31 நள்ளிரவு, 12:00 மணி வரை அமலில் இருக்கும் என, கடந்த மாதம், முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார். அதன்படி, ஊரடங்கு இன்று இரவு நிறைவடைய உள்ளது. 


ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன், இம்மாதம், 28ம் தேதி, முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார்.


அவர்கள் கூறிய கருத்துகள் அடிப்படையில், ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என, முதல்வர் இ.பி.எஸ்., இன்று அறிவிக்க உள்ளார். 


தற்போது, கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அரசு அருங்காட்சியகங்கள், சுற்றுலா தலங்கள் போன்றவை திறக்க தடை உள்ளது. இவற்றை திறக்க அனுமதி அளிக்கப்படுமா என்பது, இன்று தெரியும்.

No comments:

Post a Comment