அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கும் மருத்துவ படிப்பிற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 30, 2020

அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கும் மருத்துவ படிப்பிற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்

 அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கும் மருத்துவ படிப்பிற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்


அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அலுவலர்கள் சங்க மாநில பொருளாளர் இளங்கோ வலியுறுத்தியுள்ளார். 


மதுரையில் அவர் கூறியதாவது: அரசு, மாநகராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல, கள்ளர் சீர்மரபினர், வனத்துறைக்கு உட்பட்ட பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கான சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் இக்கல்வியாண்டில் 400 மாணவர்கள் பயன்பெறுவர்.


அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ஏழை எளிய மாணவர்கள் படிக்கின்றனர். அரசு திட்டங்கள் சலுகைகள் இப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. 


அவர்களும் பயன்பெறும் வகையில் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாக 2.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment