மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு: இக்னோ அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 16, 2020

மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு: இக்னோ அறிவிப்பு

 மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு: இக்னோ அறிவிப்பு


2020 ஜூலை மாதம் நடைபெற வேண்டிய ஆன்லைன் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் அக்.25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ அறிவித்துள்ளது.


மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ), தொலைதூரக் கல்வித் திட்டத்தில் பல்வேறு பாடங்களில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது


அந்த வகையில் 2020 ஜூலை பருவ ஆன்லைன் மாணவர் சேர்க்கைக்கான கடைசித் தேதி அக்.25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தொலைதூரக் கல்விப் படிப்புகளில் சேருவதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எனினும் இந்த நீட்டிப்பு சான்றிதழ் மற்றும் செமஸ்டர் சார்ந்த படிப்புகளுக்குப் பொருந்தாது என்றும் இக்னோ தெரிவித்துள்ளது.


மாணவர்கள் www.online admission.ignou.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பாடப்பிரிவுகள், சேர்க்கை விவரங்களைத் தெரிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் பல்கலைக்கழகத்தின் www.ignou.ac.in என்ற இணையதளத்தைக் காணவும்.


கூடுதல் விவரங்களுக்கு: https://ignouadmission.samarth.edu.in/

No comments:

Post a Comment