முன்கூட்டிய ஊக்க ஊதியம்: அரசு விளக்கம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 16, 2020

முன்கூட்டிய ஊக்க ஊதியம்: அரசு விளக்கம்

 முன்கூட்டிய ஊக்க ஊதியம்: அரசு விளக்கம்


தமிழக அரசின் தலைமைச் சண்முகம் நேற்று வெளியிட்ட அரசாணை: தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் பணியாளர்களில் உயர் தகுதி, உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு முன்கூட்டிய ஊக்க ஊதியம் அனுமதிப்பது தொடர்பாகவும், ரத்து செய்வது அல்லது நிறுத்தி வைப்பது தொடர்பாக 10.3.20ல் ஒரு ஆணை வழங்கப்பட்டது. 


இதை தொடர்ந்து, அக்கவுண்ட் டெஸ்டில் தேர்ச்சி பெற்று துணை நிலை அதிகாரிகள்-பகுதி 1க்கும் முன்கூட்டிய ஊக்க ஊதியம் நிறுத்தி வைப்பது, மற்றும் உயர் தகுதியுடையோருக்கு முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இதுகுறித்து, சென்னை நந்தனத்தில் உள்ள கணக்கு மற்றும் கருவூல ஆணையர் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள், பல்வேறு ஆசிரியர் அமைப்புகள், முன்கூட்டிய ஊக்க ஊதியம் மற்றும் இன்சென்டிவ் ஊக்க ஊதியம் ஆகியவை ஒன்றா அல்லது வேறுபாடு உள்ளவையா என்று விளக்கம் கேட்டனர்.


 அவர்கள் எழுப்பிய 10 வகையான கேள்விகளுக்கு, அரசு முதன்மைச் செயலாளர் சண்முகம் விளக்கம் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment