பள்ளியிலேயே நடக்கிறது வேலைவாய்ப்பு பதிவு
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வி தகுதிகளை அந்தந்த பள்ளிகளின் வாயிலாக ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கப்பட்டதும், அரசு வேலைவாய்ப்பு இணை யதளத்தில் விவரம் பதிவேற்றுவது வழக்கம். நடப்பாண்டு, அந்தந்த பள்ளிகளிலேயே இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிளஸ் 2 மாணவர்களுக்கு அக்., 22 (இன்று) வரை பதிவேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் நவ., 6 வரை, 15 நாட்களுக்கு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றப்பட உள்ளன.
எனவே, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யலாம்.
'இதில் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களை அலைக்கழிக்கவோ கூடாது. பள்ளி வளாகத்தில்,https://tnvelaivaaippu.gov.inஎனும் வேலைவாய்ப்பு இணையதள முகவரியை விளம்பரப் படுத்த வேண்டும்' என அனைத்து வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர்களுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment