தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஏ., படிப்பு இலவசம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 21, 2020

தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஏ., படிப்பு இலவசம்

 தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஏ., படிப்பு இலவசம்


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் பட்டப்படிப்பு, இனி இலவசமாக கற்பிக்கப்படும்,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.


சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழ்ஆராய்ச்சி நிறுவன பொன் விழா ஆண்டின் துவக்க விழா, நேற்று கொண்டாடப்பட்டது. இதில், வள்ளலார் ஆய்விருக்கையை துவக்கி வைத்து, அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இதுவரை எண்ணற்ற தமிழாய்வுத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. 



அடுத்த மாதத்தில் இருந்து, ஆண்டுதோறும், 50 அரிய நுால்கள் பதிப்பித்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். பொன் விழா ஆண்டு மலரை, முதல்வர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், கட்டணத்துடன் கற்பிக்கப்படும், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் பட்டப்படிப்பு, இனி இலவசமாக கற்பிக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.


உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் விஜயராகவன், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் மகேசன் காசிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment