போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி; முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 23, 2020

போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி; முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு

 போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி; முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு


கடலூர் : போலீஸ், சிறைக்காவலர் உள்ளிட்ட சீருடை பணியாளர்கள் தேர்வு இலவச பயிற்சிக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம், கான்ஸ்டபிள் நிலை~2, சிறைக்காவலர் நிலை ~2 மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விளம்பரம் செய்யப் பட்டுள்ளது.


இப்பணியிடங்களுக்கு கடந்த மாதம் 26ம் தேதி முதல் வரும் 26ம் தேதி வரை இணைய தளமான www.tnusrbonline.orgல் விண்ணப்பிக்கலாம்.


இத்தேர்விற்கு முன்னாள் படை வீரர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க உள்ளதால், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து விபரத்தை கடலுார் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனரிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment