'நீட்' தேர்வில் வெற்றி எளிது: மாணவி உய்ய ஸ்ரீநிலா பேட்டி - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 23, 2020

'நீட்' தேர்வில் வெற்றி எளிது: மாணவி உய்ய ஸ்ரீநிலா பேட்டி

 'நீட்' தேர்வில் வெற்றி எளிது: மாணவி உய்ய ஸ்ரீநிலா பேட்டி


நம்பிக்கை, பயிற்சி இருந்தால், கோச்சிங் சென்டர் போகாமல் கூட, நீட் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்,'' என, அத்தேர்வில், 666 மதிப்பெண் பெற்ற, மதுரை மாணவி உய்ய ஸ்ரீநிலா தெரிவித்தார்.


அவர் கூறியதாவது:மதுரை நரிமேடு கே.வி., பள்ளியில் படித்தேன். 'நீட்' தேர்வில், அகில இந்திய அளவில், 1,612வது இடம் பெற்று உள்ளேன்.


தெளிவான எண்ணம், பயிற்சி, மாதிரி தேர்வு எழுதுவது, நம்பிக்கை இருந்தால், நீட் தேர்வு என்பது பெரிய விஷயம் இல்லை.என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டம் முழுதும் படித்தேன். மாலை, 4:00 மணி முதல் இரவு, 12:00 மணி வரை படிப்பேன். தேர்வு என்ற பதற்றமின்றி, மனதை பிரீயாக வைத்துக் கொண்டு படித்தேன்.


படிப்புக்கு இடையே இசை, பாடல்கள் கேட்பேன். என்னை டாக்டர் ஆக வேண்டும் என, என் பெற்றோர் எப்போதும் வற்புறுத்தியது இல்லை. என் இஷ்டப்படி, பாடங்களை தேர்வு செய்து படித்தேன்.


பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களுடன், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பின் அடிப்படை பாடங்களை நன்கு படித்திருப்பது அவசியம். நம்பிக்கை, உரிய பயிற்சியுடன் படித்தால் எளிதில் வெற்றி பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment