முதல்வர் பழனிசாமி தாயார் காலமானார் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, October 12, 2020

முதல்வர் பழனிசாமி தாயார் காலமானார்

 

முதல்வர் பழனிசாமி தாயார் காலமானார்முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள்,93 உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இடைப்பாடி அருகே சிலுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர். 


கருப்பக்கவுண்டர் மனைவி தவுசாயம்மாள், 93. இவருக்கு விஜயலட்சுமி, 74 என்ற மகளும், கோவிந்தராஜன், 70, தமிழக முதல்வர் பழனிசாமி, 67, என இரு மகன்கள் உள்ளனர்.


வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தவுசாயம்மாள், கடந்த 9ல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 11:50 மணிக்கு இறந்தார். தாயாரின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த முதல்வர் பழனிசாமி உடனடியாக, சென்னையிலிருந்து கார் மூலம் சேலம் புறப்பட்டார். முதல்வரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன

No comments:

Post a Comment