உதவி பொறியாளர் பதவி தேர்வு நடத்த வலியுறுத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, October 15, 2020

உதவி பொறியாளர் பதவி தேர்வு நடத்த வலியுறுத்தல்

 உதவி பொறியாளர் பதவி தேர்வு நடத்த வலியுறுத்தல்


விண்ணப்பம் பெறப்பட்டுள்ள, 600 உதவி பொறியாளர் பதவிக்கு, உடனே எழுத்து தேர்வை நடத்தி, ஆட்களை நியமிக்குமாறு, தமிழக மின் வாரியத்திற்கு, பொறியாளர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து, மின் வாரிய பொறியாளர் கழக பொது செயலர், ஜெயந்தி கூறியதாவது:


 தமிழகத்தில், 526 இன்ஜினியரிங் கல்லுாரிகள் வாயிலாக, ஆண்டுக்கு, ஒரு லட்சம் இளைஞர்கள் இன்ஜினியர்களாக வெளியே வருகின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பை, அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.


மின் வாரியத்தில், 600 உதவி பொறியாளர் பதவிக்கு ஆட்களை நியமிக்க, இந்தாண்டு ஜனவரியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஊரடங்கால், தேர்வு நடத்தப்படவில்லை. 


தேர்வுக்கு விண்ணப்பித்தோர், வேறு வேலைக்கு செல்வது உட்பட, அடுத்த கட்ட முடிவை எடுக்காமல் உள்ளனர். ஏற்கனவே, அதிக எண்ணிக்கையில் காலியிடங்கள் உள்ளதால், மின் வாரியத்தில் பணிபுரியும் அனைவருக்கும் பணிச்சுமை ஏற்பட்டுஉள்ளது.


 எனவே, 600 உதவி பொறியாளர் பதவிக்கு, உடனே எழுத்து தேர்வை நடத்தி, மின் வாரியம் ஆட்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment