BSNL வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 7, 2020

BSNL வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி

 BSNL வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி


வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான மாதமாக அமைய, அனைத்து இன்டர்நெட் மொபைல் போன் டேட்டா திட்டங்களிலும், 25 சதவீதம் கூடுதலாக வழங்கும் சலுகையை, பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ளது.



இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:


அக்டோபர் மாதம், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி மாதமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி, அனைத்து மொபைல் போன் டேட்டா திட்டங்களிலும், 25 சதவீதம் வரை கூடுதலாக வழங்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சலுகை, வரும், 31ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்தத் திட்டத்தை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் கூடுதலாக, 25 சதவீதம் டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

1 comment:

  1. மொதல்ல ரீசார்ஜ் பண்ர கடைக்கு போய் ஈசி அனுப்புங்க சார்

    ReplyDelete