IBPS கிளார்க் பணிக்கு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான இலவச இணைய வழிப் பயிற்சி: அரசு பயிற்சி நிறுவனம் அறிவிப்பு
2020 - 21 ஆம் ஆண்டிற்கான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்தும் ஐபிபிஎஸ் கிளார்க் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்பு பற்றிய அறிவிப்பை கிண்டி வேலை வாய்ப்பு பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) வங்கிகளில் எழுத்தர் பதவியை நடத்துகிறது.
ஒவ்வொரு ஆண்டும், மில்லியன் கணக்கான மாணவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பங்களை IBPSக்கு அனுப்புகிறார்கள். ஐபிபிஎஸ் கிளார்க் (IBPS Clerk) என்பது இரண்டு கட்ட ஆட்சேர்ப்பு செயல்முறை ஆகும்.
ஐபிபிஎஸ் காலண்டர் 2020 இன் படி, ஐபிபிஎஸ் கிளார்க் 2020 க்கான அறிவிப்பு 2020 செப்டம்பர் 01 அன்று @ ibps.in இல் வெளியிடப்பட்டுள்ளது. ஐபிபிஎஸ் கிளார்க் பிரிலிம்ஸ் தேர்வு 2020 டிசம்பர் 05, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
2020 - 21 ஆம் ஆண்டிற்கான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்தும் ஐபிபிஎஸ் கிளார்க் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்பு பற்றிய அறிவிப்பை கிண்டி வேலை வாய்ப்பு பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறையின் இயக்குநர் ஏ.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
“சென்னை, கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.
தற்போது ஐபிபிஎஸ் கிளர்க் (IBPS) பொது தேர்விற்கு 2557 பணிக்காலியிடத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மனுதாரர்களுக்கு கட்டணமில்லா இணையவழி பயிற்சி வகுப்புகள் அக்.19 முதல் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது
இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், கீழே அளிக்கப்பட்டுள்ள Google form link வாயிலாக பதிவு செய்யுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறையின் இயக்குநர் ஏ.விஷ்ணு, தெரிவித்துள்ளார்”.
பதிவு செய்யவேண்டிய கூகுள் லிங்க்:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf3grItKXXhbX9zPswcJ58ChvW1-Wnsm8eO5hqngiQdNSOQUg/viewform?usp=sf_link
இவ்வாறு இயக்குநர் விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment