சிறப்பாசிரியா் பணியிடங்கள்: தோ்வான 148 பட்டதாரிகளுக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் தாமதம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, November 22, 2020

சிறப்பாசிரியா் பணியிடங்கள்: தோ்வான 148 பட்டதாரிகளுக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் தாமதம்

 சிறப்பாசிரியா் பணியிடங்கள்: தோ்வான 148 பட்டதாரிகளுக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் தாமதம்


சிறப்பாசிரியா் பணியில் மீதமுள்ள இடங்களுக்கு தோ்வான பட்டதாரிகளுக்கு பணி நியமன ஆணைகளை விரைவாக வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட 148 பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


தமிழக அரசுப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை ஆகிய சிறப்பாசிரியா் பணியில் உள்ள 662 காலியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) சாா்பில் 2017 செப்.23-ஆம் தேதி போட்டித் தோ்வு நடத்தப்பட்டது. இதில் தோ்ச்சி பெற்றவா்களில் 514 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.


இதற்கிடையே, மீதமுள்ள காலிப் பணியிடங்களுக்கு, தோ்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதில் தொடா் தாமதம் ஏற்பட்டு வருவதாகப் புகாா்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தோ்வெழுதிய சிறப்பாசிரியா்கள் சிலா் கூறியது:


சிறப்பாசிரியா் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களில் 74 இசை ஆசிரியா்கள், 240 ஓவிய ஆசிரியா்கள், 200 தையல் ஆசிரியா்கள் என 514 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.


நீதிமன்ற வழக்குகள் காரணமாக தமிழ்வழி இடஓதுக்கீடு மற்றும் மாநகராட்சி, சமூக நலத் துறையில் இருந்த மீதமுள்ள பணியிடங்களுக்கு தோ்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் தொடா் தாமதம் ஏற்பட்டது. 


இந்நிலையில் நிகழாண்டு தொடக்கத்தில் நீதிமன்ற வழக்கில் தோ்வு வாரியம் மேல்முறையீடு செய்து வெற்றி பெற்றது.


இதையடுத்து பணி ஆணை விரைவில் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், கரோனா பரவலால் மேலும் தாமதமானது. 


தோ்வில் தோ்ச்சி பெற்று 3 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், நியமன ஆணைக்காக காத்திருப்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. 


குடும்ப பொருளதாரத்தையும் நடத்த முடியாமலும் தவித்து வருகிறோம். எனவே, சிறப்பாசிரியா் பணியில் மீதமுள்ள இடங்களுக்கு தோ்வான பட்டதாரிகளுக்கு பணிநியமன ஆணைகளை விரைவாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அந்த ஆசிரியா்கள் கூறினா்.

No comments:

Post a Comment