கல்லூரிகளில் குறைபாடுகளை விரைவாக சரி செய்ய AICTE உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, November 22, 2020

கல்லூரிகளில் குறைபாடுகளை விரைவாக சரி செய்ய AICTE உத்தரவு

 கல்லூரிகளில் குறைபாடுகளை விரைவாக சரி செய்ய AICTE உத்தரவு


அங்கீகாரம் நீட்டிப்பு பெற்ற அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும் ஏஐசிடிஇ சுட்டிக் காட்டிய அனைத்து குறைபாடுகளையும் விரைவாக சரி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் உறுப்பினா் செயலா் ராஜீவ் குமாா், அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; 


2020-21-ம் கல்வியாண்டுக்கான அங்கீகாரம் நீட்டிப்பு பெற்ற அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும், தங்கள் கல்லூரி சாா்ந்து ஏதேனும் சிறிய குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதா என்பதை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும்.


அவ்வாறு ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை விரைவாக சரிசெய்து அதன் விவரங்களை ஏஐசிடிஇக்கு அனுப்ப வேண்டும். ஏனெனில், இந்த விவகாரம் சாா்ந்த ஆய்வுப்பணிகள் எந்த நேரத்திலும் தொடங்கப்படலாம்.


 எனவே சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை சரிசெய்யாமல் இருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment