மருத்துவ சிறப்பு பிரிவில் 60 இடங்கள் நிரம்பின - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, November 21, 2020

மருத்துவ சிறப்பு பிரிவில் 60 இடங்கள் நிரம்பின

 மருத்துவ சிறப்பு பிரிவில்  60 இடங்கள் நிரம்பின


சிறப்பு பிரிவினருக்கான, மருத்துவ மாணவர் சேர்க்கையில், 58 எம்.பி.பி.எஸ்., மற்றும்~ இரண்டு பி.டி.எஸ்., என, 60 இடங்கள், நிரம்பின.


சென்னை, பெரியமேட்டில் உள்ள, நேரு உள்விளையாட்டு அரங்கில், 2020~ ~ 21ம் கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.முதல் கட்டமாக நடந்த, 7.5 சதவீத, அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு கவுன்சிலிங்கில், 405 இடங்களில், 399 இடங்கள் நிரம்பின; ஆறு பி.டி.எஸ்., இடங்கள் நிரம்பவில்லை.இதையடுத்து, சிறப்பு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை, நடந்தது. கவுன்சிலிங்கிற்கு, 70 மாணவர்கள் அழைக்கப்பட்ட நிலையில், 64 பேர் பங்கேற்றனர்.அவர்களில், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஒதுக்கீட்டில், 10 எம்.பி.பி.எஸ்., ~மற்றும் ஒரு பி.டி.எஸ்., இடங்கள்; விளையாட்டு பிரிவில், ஏழு எம்.பி.பி.எஸ்., மற்றும்~ ஒரு பி.டி.எஸ்., இடங்கள் நிரம்பின.


அதேபோல, மாற்றுத் திறனாளிகள் பிரிவில், 41 எம்.பி.பி.எஸ்., இடங்கள் என, மொத்தம், 60 இடங்கள் நிரம்பியுள்ளன.இதை தொடர்ந்து, நாளை முதல் டிசம்பர், 4ம் தேதி வரை, பொது பிரிவினர் மற்றும் இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. இடையில், 29ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மட்டும் விடுமுறை என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment