'ஆன்லைனில்' பிளாஸ்டிக் ஆதார் அட்டை - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, November 21, 2020

'ஆன்லைனில்' பிளாஸ்டிக் ஆதார் அட்டை

 'ஆன்லைனில்' பிளாஸ்டிக் ஆதார் அட்டை


ஏ..டி.எம்., கார்டு போன்ற பிளாஸ்டிக் ஆதார் அட்டையை, 'ஆன்லைன்' மூலம் பெறும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மத்திய - மாநில அரசு திட்டங்களுக்கு, ஆதார் விபரம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை கைக்கு அடக்கமாக இல்லை. சட்டை பாக்கெட் அல்லது பர்சில் வைத்துக்கொள்ள முடியாது. 


இத்தகைய பிரச்னையை பரிசீலித்த ஆதார் நிறுவனம், கைக்கு அடக்கமான, சிறிய பிளாஸ்டிக் ஆதார் அட்டையை, 'ஆன்லைன்' மூலம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.


ஆதார் பதிவு அதிகாரிகள் கூறியதாவது:


ஏ.டி.எம்., கார்டுகளை போல், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் ஆதார் அட்டையை, 50 ரூபாய் கட்டணத்தில் பெறலாம். uidai.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று, பிளாஸ்டிக் ஆதார் அட்டையை, 'ஆர்டர்' செய்யலாம். 


அதற்கான கட்டணம், 50 ரூபாயை, 'ஆன்லைன்' மூலமாகவே செலுத்தி, ஆதார் விபரத்தை சரிபார்த்து ஒப்புதல் அளித்ததும், விரைவு தபால் மூலமாக, அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment