69 ஆயிரம் உதவி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உச்ச நீதிமன்றம் அனுமதி - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, November 18, 2020

69 ஆயிரம் உதவி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உச்ச நீதிமன்றம் அனுமதி

 69 ஆயிரம் உதவி ஆசிரியர் பணியிடங்களை  நிரப்ப உச்ச நீதிமன்றம் அனுமதி


உத்தர பிரதேசத்தில், உதவி ஆசிரியர்களுக்கான, 69 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 


இங்கு, கடந்த ஆண்டு ஜனவரி மாதம், உதவி ஆசிரியர்களுக்கான, 69 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப, தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வு முடிவுகள், கடந்த மே மாதம் வெளியாகின.


 தள்ளுபடிஅந்த தேர்வில், பொதுப் பிரிவினருக்கு, 65 சதவீதமும்; ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு, 60 சதவீதமும், தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டது.


கடந்த, 2018ல், இந்த மதிப்பெண்கள், 40 மற்றும், 45 சதவீதமாக இருந்த நிலையில், அதை உயர்த்தி, மாநில அரசு வெளியிட்ட உத்தரவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின.


இதை எதிர்த்து 'உ.பி., பிராத்மிக் சிக்ஷா மித்ரா சங்கம், தேர்வு எழுதியோர் என பலரும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு, உ.பி., மாநில அரசிடம் விளக்கம் பெற்றது.


தகுதி மதிப்பெண்


இந்நிலையில்மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:


தகுதி மதிப்பெண் தொடர்பாக, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. 


கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளை வைத்து, உதவி ஆசிரியர்களுக்கான, 69 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment