நீட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி: நவம்பர் 8-ல் அறிமுக வகுப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 3, 2020

நீட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி: நவம்பர் 8-ல் அறிமுக வகுப்பு

 நீட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி:  நவம்பர் 8-ல் அறிமுக வகுப்பு


மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு சென்னையில் இலவசமாக ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படுகிறது.


இதுதொடர்பாக பி.டி.செங்கல்வராயர் சிறப்பு பள்ளியின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவஹர்  வெளியிட்ட செய்திக்குறிப்பு:


பி..டி.செங்கல்வராயர் சிறப்பு பள்ளி சார்பில் 2021 ‘நீட்’ தேர்வுக்கு இணையவழியிலான இலவச பயிற்சி வகுப்புகள் நவ.15 முதல் அடுத்த ஆண்டு ஏப்.30 வரை நடைபெற உள்ளன


. வகுப்புகள் ஒருநாள் விட்டு ஒருநாள் கூகுள் மீட் வழியாக நடைபெறும். இதற்கான அறிமுக வகுப்பு இணையவழி வாயிலாக நவ.8-ம் தேதி (ஞாயிறு) காலை 11 மணிக்கு நடத்தப்படுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் https://meet.google.com/phy-xjxy-qua என்ற கூகுள் மீட் லிங்க்கை பயன்படுத்தி பங்கேற்கலாம்.


 

No comments:

Post a Comment