நவோதயா பள்ளியில் 9ம் வகுப்பில் சேர விண்ணப்பிக்க அழைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, November 11, 2020

நவோதயா பள்ளியில் 9ம் வகுப்பில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

 நவோதயா பள்ளியில் 9ம் வகுப்பில் சேர  விண்ணப்பிக்க அழைப்பு


புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பில் சேர்வதற்கு வரும் டிச.15க்குள் விண்ணப்பிக்கலாம். 


இது குறித்து புதுச்சேரி ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயங்கி வரும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 9ம் வகுப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது


.இப்பள்ளிகளில் சேர்வதற்கு மாணவ, மாணவியர் பயிலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் தற்போது 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். 


01.05.2005 தேதி முதல் 30.04.2009ம் தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். பட்டியலினத்தவருக்கும் இது பொறுந்தும்


.தகுதி வாய்ந்த மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை www.navodaya.gov.in என்ற இணையதளத்தில் www.nvsadmissionclassnine.in எனும் இணை முகப்பில் வரும் டிச.15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


 தேர்வு வரும் பிப்ரவரி 13ம் தேதி நடைபெறும்.மேலும் விபரங்களுக்கு 0413~2655133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment