தனியார் பள்ளியில் படிக்க உதவி பெற விண்ணப்பிக்கலாம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, November 11, 2020

தனியார் பள்ளியில் படிக்க உதவி பெற விண்ணப்பிக்கலாம்

 தனியார் பள்ளியில் படிக்க உதவி பெற விண்ணப்பிக்கலாம்


ராமநாதபுரத்திலுள்ள கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைககளை தனியார் பள்ளியில் படிக்க வைக்க, நலவாரியத்தில் விண்ணப்பித்து உதவி பெறலாம்.


ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி கூறியுள்ளதாவது: 


தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகள் ஐந்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றால் தனியார் பள்ளியில் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.


 இதன்படி வட்டாரத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கலாம்.


 தற்போது ஐந்து மற்றும் பத்தாம்வகுப்பு அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்கள் ஆறு, பிளஸ் 1 வகுப்பில் தனியார் பள்ளியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் அல்லது 04567 ~ 221 844, 226 255 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்,' இவ்வாறு அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment