'ஆன்லைன்' வகுப்புக்கு தீபாவளி விடுமுறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 11, 2020

'ஆன்லைன்' வகுப்புக்கு தீபாவளி விடுமுறை

 'ஆன்லைன்' வகுப்புக்கு  தீபாவளி விடுமுறை



தீபாவளி பண்டிகையை ஒட்டி, இன்று முதல் நான்கு நாட்களுக்கு, 'ஆன்லைன்' வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில், ஏழு மாதங்களாக, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


 அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி 'டிவி'யில் பாடங்கள் ஒளிபரப்பாகின்றன.


இந்நிலையில், வரும், 14ம் தேதி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது


.வரும், 14ம் தேதி குழந்தைகள் தினம் என்பதால், அன்று மட்டும் வகுப்புகள் இல்லாமல், 'ஆன்லைனில்' பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுக்கு, தனியார் பள்ளிகள் ஏற்பாடு செய்துள்ளன.

No comments:

Post a Comment