B.E நேரடி 2ம் ஆண்டு சேர்க்கை; நிரம்பிய மற்றும் காலி இடங்கள் விவரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, November 8, 2020

B.E நேரடி 2ம் ஆண்டு சேர்க்கை; நிரம்பிய மற்றும் காலி இடங்கள் விவரம்

 B.E  நேரடி 2ம் ஆண்டு சேர்க்கை; நிரம்பிய மற்றும் காலி இடங்கள் விவரம்


பிஇ நேரடி இரண்டாம் ஆண்டு கவுன்சலிங்கில் 81,042 இடங்களுக்கு ெவறும் 7,014 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 74,028 இடங்கள் காலியாக உள்ளன. 


தமிழகத்தில் பிஇ நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 453 அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 81 ஆயிரத்து 42 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த ஆண்டு 10,655 பேர் விண்ணப்பித்திருந்தனர். 


இதில் 8,023 விண்ணப்பங்கள் தகுதியானவையாக இருந்தன. இவர்களுக்கான ஆன்லைன் கவுன்சலிங் அக். 27ல் துவங்கி கடந்த 7ம் தேதி முடிந்தது. விண்ணப்பித்தவர்களில் 1,169 பேர் ஆப்சன்ட் ஆகினர்.


எனவே 7,014 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் மலையாளமூர்த்தி கூறுகையில், 


‘‘ மாணவர்கள் இறுதி ஒதுக்கீடு ஆணையை டவுன்லோடு செய்து தக்க கல்லூரியில் அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பித்து சேர்ந்து கொள்ளலாம்’’ என்றார்.

No comments:

Post a Comment