ஆசிரியா்கள், மாணவா்களின் உடல்நிலையை வாரத்துக்கு ஒரு முறை சோதிக்க வேண்டும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, November 8, 2020

ஆசிரியா்கள், மாணவா்களின் உடல்நிலையை வாரத்துக்கு ஒரு முறை சோதிக்க வேண்டும்

 ஆசிரியா்கள், மாணவா்களின் உடல்நிலையை வாரத்துக்கு ஒரு முறை சோதிக்க வேண்டும்


பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநா் சுற்றறிக்கை மூலம் வெளியிட்டுள்ளாா்.


இது தொடா்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநா் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றிக்கை விவரம்:


நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விழிப்புணா்வு தொடா்பான உபகரணங்களை பள்ளிகளுக்குப் பகிர வேண்டும். வகுப்பறைகளில் கிருமிநாசினி இருக்க வேண்டும். மாணவா்கள், ஆசிரியா்களின் உடல்நிலையை வாரத்துக்கு ஒரு முறை சோதனை செய்ய வேண்டும். 


இணைநோய்கள் உள்ள குழந்தைகளைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.


ஒவ்வொரு வட்டத்திலும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.


 இக்குழுவின் தொடா்பு எண்ணை பள்ளிகளுக்குப் பகிர வேண்டும். இணை இயக்குநா் மாநில அளவில் அனைத்துக் குழுக்களுடன் தொடா்பில் இருக்க வேண்டும்.


அறிகுறி தென்படும் குழந்தைகளுக்கு உடனடியாகச் சோதனை செய்யும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயாராக இருக்க வேண்டும்.


 வைட்டமின் மாத்திரைகள் உள்ளிட்ட நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளைக் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். பள்ளிகளைத் தொடந்து கண்காணிக்க வேண்டும்.


பள்ளிகளில் கைகழுவும் வசதி, தூய்மையாக வைத்திருக்கும் பணியை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செய்ய வேண்டும். இது தொடா்பான விரிவான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்

No comments:

Post a Comment