அரசு பள்ளிகளில் வயது வந்தோர் கல்வித்திட்டம்: வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, November 1, 2020

அரசு பள்ளிகளில் வயது வந்தோர் கல்வித்திட்டம்: வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

 அரசு பள்ளிகளில் வயது வந்தோர் கல்வித்திட்டம்: வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்


அரசுப்பள்ளிகளில் கற்போம் எழுதுவோம் மையம் அமைப்பதற்கான, வழிமுறைகள் குறித்து உடுமலை கல்வி மாவட்டத்தில், ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், புதிதாக வயது வந்தோர் கல்வித்திட்டம் துவக்கப்பட உள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகள் செய்வதற்கும், உடுமலை கல்வி மாவட்டத்தில், ஆசிரியர்களுக்கு, தலைமையாசிரியர்களுக்கும், வாட்ஸ் ஆப் குழுவில், கல்வித்துறை அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.


இதன்படி, அந்தந்த பள்ளியின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பகுதியில் உள்ள, 15 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாதவர்களின் பட்டியலை தயாரிக்க வேண்டும்.


 அங்கன்வாடி மையங்கள் மற்றும் வேலை உறுதி திட்டத்தில் பராமரிக்கப்படும், மக்கள்தொகை பட்டியல்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.குறைந்த பட்சம் 20 நபர்கள் இருக்க வேண்டும்.


 இவர்களுக்கான கற்பித்தல் நேரம், பள்ளி வேலை நாட்களில், நாள்தோறும், இரண்டு மணி நேரமாக ஒதுக்கப்பட வேண்டும்.பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தன்னார்வலர் ஒருவரை நியமித்து, பாடம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இதில், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். 


ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள், ஜேஆர்சி,என்.எஸ்.எஸ்., சாரணர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளில் உள்ள மாணவர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.தன்னார்வலர்கள் இல்லாத பட்சத்தில் ஆசிரியர்கள் இந்த பொறுப்பை ஏற்க வேண்டும்.


 தன்னார்வலருக்கு மதிப்பூதியம் கிடையாது. சிறப்பாக செயல்படும் தன்னார்வலருக்கு மாவட்ட நிர்வாகத்தின் பாராட்டும் விருதும் வழங்கப்படும்.பாடம் நடத்தப்படும் பள்ளி, கற்போம் எழுதுவோம் மையமாக வழங்கப்படுகிறது.


 இந்த மையத்துக்கு வர முடியாத சூழலில், ஆர்வமுள்ளவர்களுக்கு அவர்களின் பணியிடத்துக்கு சென்று கற்பிக்கவும் வேண்டும்.இது தொடர்பாக விரைவில், மொபைல் செயலியும் துவக்கப்பட உள்ளதாகவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான தேர்வு நடத்துவதற்கும், தன்னார்வலர்கள் மற்றும் கற்போர் பட்டியல் தயாரித்து, அனுப்புவதற்கும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment