நீட் இலவச பயிற்சி : பள்ளிக் கல்வித்துறையின் புதிய உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, November 1, 2020

நீட் இலவச பயிற்சி : பள்ளிக் கல்வித்துறையின் புதிய உத்தரவு

 நீட் இலவச பயிற்சி : பள்ளிக் கல்வித்துறையின் புதிய உத்தரவு


தமிழக பள்ளி கல்வி துறையின், 'நீட்' தேர்வுக்கான இலவச பயிற்சியில், முன்னாள் மாணவர்களை சேர்க்க, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.


மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத இடங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடாக வழங்கப்படும் என, தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது.


 நடப்பு கல்வி ஆண்டிலேயே, அமலுக்கு வருகிறது.இதைத் தொடர்ந்து, அரசு பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், தற்போதே, 'நீட்' பயிற்சிக்கான பதிவுகள் துவங்கியுள்ளன.


இந்நிலையில், ஏற்கனவே அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்து, மருத்துவக் கல்விக்கு தயாராக உள்ள மாணவர்களை, இலவச நீட் பயிற்சிக்கு, 'ரிப்பீட்டர்ஸ்' பட்டியலில் சேர்த்து பயிற்சி வழங்க, பள்ளி கல்வி இயக்குனரகம் சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.

No comments:

Post a Comment