மீன்வள பல்கலை சேர்க்கை கலந்தாய்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, November 1, 2020

மீன்வள பல்கலை சேர்க்கை கலந்தாய்வு

 மீன்வள பல்கலை சேர்க்கை  கலந்தாய்வு


தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தில், இளநிலை பட்டப்படிப்புக் கான தரவரிசைப் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.


தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு, மூன்று கல்லுாரிகளிலும்; பி.டெக்., படிப்பு, நான்கு கல்லுாரிகளிலும் பயிற்றுவிக்கப்படுகிறது


.மேலும், இளநிலை வணிக மேலாண்மை, ஒரு கல்லுாரியிலும், இளநிலை தொழில்நுட்பவியல் படிப்பு, நான்கு தொழில்சார் கல்லுாரிகளிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.


 மேற்கண்ட படிப்புகளில், மொத்தமுள்ள, 386 இடங்களுக்கு, நடப்பு கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 


இதற்கான தரவரிசைப் பட்டியலை, பல்கலைக்கழக இணையதளத்தில், துணைவேந்தர் சுகுமார் நேற்று வெளியிட்டார். 


சென்னை மாணவர் ஆதித்யா நாகராஜன், 195.50 மதிப்பெண்கள் பெற்று, முதல் இடத்தையும், துாத்துக்குடி மாணவர், ரிஷி கேசவன் இரண்டாம் இடத்தையும், தேனி மாணவர் கோபிகிருஷ்ணா, மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.


சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு, வரும் 7ம் தேதி, நாகையில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். பொது கலந்தாய்வு, இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. 


இக்கலந்தாய்வு, வரும் 9 முதல் 11ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடைபெறும். முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான, 2020~ ~ 2021 ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, பல்கலைக்கழக இணைய முகவரி வாயிலாக, நவ., 1ல் துவங்கி, 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment