நீட் தேர்வு கெடுபிடிகள் மத்திய அரசுக்கு உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 2, 2020

நீட் தேர்வு கெடுபிடிகள் மத்திய அரசுக்கு உத்தரவு

 நீட் தேர்வு கெடுபிடிகள் மத்திய அரசுக்கு உத்தரவு


மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத வரும் மாணவியரிடம், தாலி, மெட்டியை அகற்றும்படி நிர்ப்பந்திப்பதற்கு, தடை விதிக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



பரிசோதனை


சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் அரவிந்த் ராஜ் தாக்கல் செய்த மனு: மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்காக, 'நீட்' தேர்வு ஆண்டு தோறும் நடத்தப் படுகிறது


. தேசிய தேர்வு முகமை, இந்த தேர்வை நடத்துகிறது. தேர்வு எழுதும் அறைக்குள் நுழையும் முன், முழுமையாக பரிசோதிக்கின்றனர்.தேர்வு எழுத வரும் மாணவர்களை, மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். 


இதனால், மாணவர்களுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது. பெண்களை துன்புறுத்துகின்றனர்.


திருமணமான பெண்களிடம், தாலியை அகற்றும்படி கட்டாயப்படுத்துகின்றனர். மெட்டி, மூக்குத்தி, காதணிகளை கழற்றும்படி நிர்ப்பந்திக்கின்றனர்.கணவன் மரணம் அடைந்தால் தான், ஒரு பெண்ணின் கழுத்தில் அணியும் தாலி அகற்றப்படும். 


சர்வதேச விமான நிலையங்களில் கூட, பாதுகாப்பு சோதனையின் போது, தாலியை அகற்றும்படி கூற மாட்டார்கள். ஏனென்றால், அது ஒரு புனிதமான குறியீடு. தாலியை அகற்றும்படி கூறுவது, பெண்களின் உணர்வுகளை பாதிக்கும்; மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும். தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க, இந்த நடைமுறைகளை பின்பற்றுவதாக கூறுகின்றனர்.


தேர்வு மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன


கண்காணிப்பாளர்கள் உள்ளனர். தடை விதிக்க வேண்டும்சோதனை என்ற பெயரில், தேர்வு எழுத வருபவர்களிடம் நடத்தும் கெடுபிடியை நிறுத்த வேண்டும். திருமணமான பெண்களிடம் தாலி, மெட்டி, மூக்குத்தி, காதணியை அகற்றும்படி கோருவதற்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது


.மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, மத்திய சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தேசிய மருத்துவ ஆணையத்துக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment