GROUP 4 பணி கலந்தாய்வு துவக்கம்
டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - -4' எழுத்து தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேற்று கலந்தாய்வு துவங்கியது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான, 'குரூப் -- 4' பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு, கடந்தாண்டு செப்., 1ல் நடந்தது.
கொரோனா நோய் தொற்று காரணமாக, இந்தாண்டு மார்ச்சில் நடக்கவிருந்த, தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.
நேற்று துறை ஒதுக்கீட்டுக்கான ஆணையை, தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன், தேர்வர்களுக்கு வழங்கினார். தமிழக அரசின் பல்வேறு துறைகளில், 2,839 தட்டச்சர் பணியிடங்கள், நிரப்பப்பட உள்ளன.
No comments:
Post a Comment