மாநில மொழிகளில் தொழில் கல்வி படிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, November 26, 2020

மாநில மொழிகளில் தொழில் கல்வி படிப்பு

 மாநில மொழிகளில் தொழில் கல்வி படிப்பு


அடுத்த கல்வியாண்டு முதல், மாநில மொழிகளில், தொழில் கல்வி படிப்புகளை படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்' என, மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.


மத்திய கல்வி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது


:மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தலைமையில், உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.இதில், அடுத்த கல்வியாண்டு முதல், பொறியியல் கல்வி உள்ளிட்ட தொழில் கல்வி படிப்புகளை, மாநில மொழிகளில் படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டது. 

குறிப்பாக, ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., கல்வி நிறுவனங்களில், மாநில மொழிகளில் படிப்பதற்கான வசதி செய்து தர தீர்மானிக்கப்பட்டுள்ளது.


 கொரோனா பரவலால், பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால், இந்த கல்வியாண்டில், பாடங்களை மத்திய கல்வி வாரியமும், மாநில கல்வி வாரியங்களும் குறைத்துஉள்ளன.


அதனால், ஜே.இ.இ., மற்றும் 'நீட்' தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை, மாநில கல்வி வாரியங்களின் பாட திட்டங்களை ஆய்வு செய்தபின், தேர்வுக்கான பாட திட்டங்களை முடிவு செய்யும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment