தேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பிக்க அழைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, November 26, 2020

தேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பிக்க அழைப்பு

 தேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பிக்க அழைப்பு


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகையை அரசு வழங்குகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் விபரங்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், டிச., 4 வரை பதிவு செய்யலாம்.


அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்கள், விருப்பமுள்ள மாணவர்களின் விபரங்களை, பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளம் வழியாகவும், கூடுதல் விபரங்களை மாணவர்களிடம் பெற்றும், பதிவேற்றம் செய்ய வேண்டும். 


பதிவேற்றம் முடிந்த அறிக்கையை, தலைமையாசிரியர்கள், மாவட்ட உதவி இயக்குனர் அலுவலர்களிடம், டிச., 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது

No comments:

Post a Comment