வரும் கல்வி ஆண்டு முதல் தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி: மத்திய கல்வி அமைச்சகம் முடிவு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, November 26, 2020

வரும் கல்வி ஆண்டு முதல் தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி: மத்திய கல்வி அமைச்சகம் முடிவு

 வரும் கல்வி ஆண்டு முதல் தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி: மத்திய கல்வி அமைச்சகம் முடிவு


வரும் கல்வியாண்டு முதல் பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் மாணவர்கள் கற்கும் புதிய திட்டத்துக்கு அனுமதி வழங்க, மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


 தாய்மொழியில் கல்வி கற்பதே ஒருவரின் சிந்தனை வளத்துக்கும், உள சமூக வளர்ச்சிக்கும் சிறந்தது என்று கூறப்படுகிறது. எனினும், பல்வேறு அரசியல் பொருளாதாரச் சூழ்நிலைகளால் தற்போது வரை அதற்கு தடையாக இருந்து வருகிறது. 


குறிப்பாக, தமிழகத்தில் தாய்மொழி கல்வியை அமல்படுத்தும்படி மத்திய அரசை அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.


இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில், கல்வி அமைச்சக கூட்டம் நேற்று நடந்தது. 


இதில், வரும் கல்வி ஆண்டு முதல் பொறியியல் உட்பட தொழில்நுட்பம் அதாவது ஐ.ஐ.டி மற்று சில அமைப்பு ஆகிய படிப்புகளை மாணவர்கள் அவர்களின் மாநில தாய்மொழியில் பயிலும் நடைமுறையை கொண்டு வருவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. 


மேலும், திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும்போது ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பது பற்றிய முடிவுகளை எடுக்கும்படி தேசிய தேர்வு முகமையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.


 தமிழகத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழை ஒரு பாடமாக கூட வைக்க முடியாதா என உயர் நீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பி இருந்த நிலையில், மத்திய அமைச்சக கூட்டத்தில் இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment