நாளை மறுநாள் முடிகிறது துணை இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, November 4, 2020

நாளை மறுநாள் முடிகிறது துணை இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு

 நாளை மறுநாள் முடிகிறது துணை இன்ஜினியரிங்  கவுன்சிலிங் பதிவு


இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங் பதிவுக்கு, நாளை மறுநாள் அவகாசம் முடிகிறது.


தமிழகத்தில், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.


 பொதுப் பிரிவு, தொழிற்கல்வி, மாற்று திறனாளிகள் உள்ளிட்ட, சிறப்பு பிரிவினர் உள்ளிட்டோருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், துணை தேர்வு எழுதிய மாணவர்களுக்கான துணை கவுன்சிலிங் நடவடிக்கை துவங்கி உள்ளது. 


இதற்கான ஆன்லைன் பதிவு, நேற்று முன்தினம் துவங்கியது. நாளை மறுநாளுக்குள் பதிவை முடித்து கொள்ளுமாறு, தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment