தமிழ் பல்கலை பணி நியமனங்கள் முறைகேட்டை விசாரிக்க கோரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, November 4, 2020

தமிழ் பல்கலை பணி நியமனங்கள் முறைகேட்டை விசாரிக்க கோரிக்கை

 தமிழ் பல்கலை பணி நியமனங்கள் முறைகேட்டை விசாரிக்க கோரிக்கை


தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் நடந்த பணி நியமன முறைகேடுகள் தொடர்பாக, கவர்னர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. 


இது குறித்து, ஆய்வு மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சிவகுமார், துணை பொருளாளர் தென்னன் மெய்மன் ஆகியோர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலையில், 2017 ~ 18ம் ஆண்டுகளில், 43 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த பணியிடங்கள் அனைத்தும், தகுதி இல்லாதவர்களுக்கு லஞ்சம் பெற்று, பணி நியமனம் வழங்கப்பட்டது.


இது குறித்து, நாங்கள் அப்போது கேள்வி எழுப்பினோம்


. இதற்காக, எங்களது ஆய்வு பதிவுகளை நீக்கி விட்டனர். அப்போது, பல்கலை இணைவேந்தரும், அமைச்சருமான பாண்டியராஜன், அனைத்து பணியிடங்களும் எவ்வித முறைகேடுமின்றி, நேர்மையாக, தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறினார்.


ஆனால், கடந்தாண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினர், இந்த பணி நியமனம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்துள்ளனர்.


 இதில், 24 நியமனங்கள் தொடர்புடைய நபர்களை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளனர். மீதமுள்ள, 19 உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக, விசாரணை நடத்த மறுக்கின்றனர்.


'இணைவேந்தரின் அரசியல் குறுக்கீடு காரணமாக, நடவடிக்கை எடுக்கவில்லை' என, லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகின்றனர். 


எனவே, முறையற்ற வகையில் பணி நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக, பல்கலை வேந்தரான கவர்னர் தலைமையில், உயர்நிலை குழு அமைத்து விசாரணை நடத்தி, பணி நியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், சி.பி.ஐ., விசாரணைக்கு கவர்னர் பரிந்துரை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment