மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் ஆன்லைன் குளறுபடியால் தவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 4, 2020

மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் ஆன்லைன் குளறுபடியால் தவிப்பு

 மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் ஆன்லைன் குளறுபடியால் தவிப்பு


மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.


தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, 4,981 எம்.பி.பி.எஸ்., 1,760 பி.டி.எஸ்., படிப்பு இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை, மருத்துவக் கல்வி இயக்ககம் துவக்கியுள்ளது.


ரகசிய எண்


இதற்கு, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதுபோன்று விண்ணப்பிக்கும் போது, பதிவு செய்யும் மொபைல் போன் எண்ணிற்கு, ஓ.டி.பி., எனப்படும், ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் வருகிறது.


ஏற்பதில்லை



அந்த ஓ.டி.பி., எண் அளித்தும், உள் நுழையாமல், தொழில்நுட்ப கோளாறு என, தகவல் கிடைக்கிறது


.இது குறித்து புகார் அளிக்கவும், விண்ணப்பிப்பதில் எழும் சந்தேகங்களை கேட்கவும், மருத்துவக் கல்வி இயக்ககம் அளித்துள்ள மொபைல் எண்களை தொடர்பு கொண்டால், யாரும் அழைப்பை ஏற்பதில்லை என, மாணவர்களும், பெற்றோரும் குற்றம் சாட்டுகின்றனர்.இதனால், மருத்துவப் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல், மாணவர்கள் தவித்து வருகின்றனர்.


இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறியதாவது


:தமிழகம் முழுதும், ஒரே நேரத்தில், அனைவரும் விண்ணப்பிக்க முயற்சி செய்வதால், இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டு இருக்கலாம். இப்பிரச்னை வராமல் சரி செய்யப்படும்.


 தகவல் மையத்தில் வரும் அழைப்புகளை ஏற்க, தேவையான அளவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வருங்காலங்களில் இதுபோன்ற பிரச்னை ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment