வன காப்பாளர் பணி்க்கு சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழகத்தில், 320 வனக் காப்பாளர் பணிஇடங்களை நிரப்புவதற்கான, 'ஆன்லைன்' தேர்வு, மார்ச்சில் நடந்தது. ஊரடங்கு உத்தரவால், அதற்கு பிந்தைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், வனச் சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்ட அறிவிப்பு:தேர்வுக்கு பிந்தைய நடவடிக்கைகளுக்காக, ஒரு பணியிடத்துக்கு, மூன்று பேர் வீதம், விண்ணப்பதாரர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியல், இம்மாத இறுதி வாரத்தில் வெளியிடப்படும். இதன் பின், டிச., 5, 6, 7ம் தேதிகளில், சென்னையில் சான்றிதழ் சரிபார்த்தல் பணிகள் மேற்கொள்ளப்படும்.அடுத்து, டிச., 8ல் உடல் திறன் தேர்வு நடத்தப்படும்.
இவற்றில் தேர்வானவர்களின் இறுதி பட்டியல், டிசம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment